Monday, December 12, 2011

ஹொல்ஸிம் உதைபந்தாட்ட பரிசளிப்பு விழா


(புத்தளம் செய்தியாளர்) 
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் ஹொல்ஸிம் அனுசரனையில் நடாத்திய ஹொல்ஸிம் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

சுற்றுத் தொடரில் சம்பியன் அணியாக தெரிவாகிய யுனைட்டெட் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் பணப் பரிசும் பரிசளிக்கப்பட்டது. புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் செயலாளர் எம்.ஜே.எம். ஜவ்ஸி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஹொல்ஸிம் தொழிற்சாலை முகாமையாளர் ஜயந்த ரத்னாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். செம்பியன் அணி யுனைட்டட் அணிக்கும் சுற்றுத் தொடரில் விளையாடிய அணிகளுக்கும் இடையே சினேகபூர்வ போட்டியொன்றும் நடைபெற்றது.




0 comments:

Post a Comment