Tuesday, December 20, 2011

ஒன்லைன் மோட்டார் காப்புறுதி ; ஜனசக்தி-சிங்கர்


ஜனசக்தி காப்புறுதி பி.எல்.சி மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்கா பி.எல்.சி ஆகியன, அதன் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் காப்புறுதியில் இன்னுமொரு புத்தாக்கமான சேவை மேம்படுத்தலுக்காக ஒன்றிணைந்துள்ளன.


இது முதற்கொண்டு, இலங்கையில் எந்தவொரு இடத்திலுமுள்ள சிங்கர் காட்சியறைகளில் மோட்டார் சைக்கிள் வாங்கும் எவரும் ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் வாகன காப்புறுதியையும் அதே நேரத்தில் கொள்வனவு செய்யலாம். இதன் மூலம் வாடிக்கையாளர் சேவை மற்றும் வாடிக்கையாளர் சௌகரியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. ஜனசக்தி வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனம் எதுவாக இருப்பினும் எந்தவொரு சிங்கர் காட்சியறையிலும் வாகன காப்புறுதியை கொள்வனவு செய்யலாம்.

இந்த சிறப்பான வசதி குறித்து விளக்கமளித்த ஜனசக்தியின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்டர் நாடு முழுவதுமுள்ள சிங்கரின் 350 காட்சியறைகளும் ஜனசக்தி தலைமை அலுவலகத்துடன் ஒன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் வாகன காப்புறுதியை வழங்குவது மிகவும் இலகுவானதாக மாறியுள்ளது. சிங்கரிடமிருந்து மோட்டார் சைக்கிள் அல்லது டிரக்டரை கொள்வனவு செய்யும் ஒரு வாடிக்கையாளர் காப்புறுதியை பெறுவதற்காக ஜனசக்தி கிளைக்கு வரவேண்டியதில்லை.

சிங்கர் ஸ்ரீ லங்காவின் சிரேஷ்ட முகாமையாளர் – நிதி சேவைகள், விரேஷ் கோமஸ் தெரிவிக்கையில், “சிங்கர் பிளஸ், சிங்கர் மெகா, சிங்கர் ஹோம்ஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் ஆகியவற்றின் சகல கிளைகளிலும் இந்த சேவையை ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். சிங்கர் விற்பனை செய்யும் மோட்டார் சைக்கிள் மற்றும் டிரக்டருக்கு மேலதிகமாக, எந்தவொரு வாடிக்கையாளரும் காட்சியறைக்கு வந்து மோட்டார் காப்புறுதியை கொள்வனவு செய்யலாம். இந்த கூட்டிணைப்பானது ஜனசக்தி மற்றும் சிங்கருக்கு மாத்திரமல்லாது சகல பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் தொடர்ச்சியான புத்தாக்கத்துக்கு உத்தேசித்துள்ள ஜனசக்தி, இலங்கையின் போட்டித்தன்மைமிக்க காப்புறுதித் துறையில் பல முதலாவதுகளை அறிமுகம் செய்துள்ளது.

ஜனசக்தியின் உற்பத்திகளையும், சேவைகளையும் நகர்த்தும் முன்னனி காரணிகளாக புத்தாக்கமும், உத்வேகமும் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் துறைசார் முதலாவதுகளை அறிமுகப்படுத்தி, ஜனசக்தி உள்ளுர் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருட இறுதியில் இலங்கையின் முதலாவது 24 மணிநேர வாகன பழுதுபார்த்தல் காப்புறுதியை அறிமுகப்படுத்தி, இலங்கையின் காப்புறுதித் துறையில் ஒரு புரட்சியை ஜனசக்தி ஏற்படுத்தியது. துறைசார் முதலாவதுகளில் காப்புறுதி முதிர்வடைந்த பின்னரும் ஆயுள் முழுவதுமான வைத்தியசாலை வசதியை வழங்கும் இலங்கையின் ஒரேயொரு மருத்துவ காப்புறுதியாக ‘ஜனசக்தி லைஃப் அன்லிமிட்டட் விளங்குகிறது.

இலங்கையின் முதலாவது வாகன கண்காணிப்பு மற்றும் செயலிழக்கும் காப்புறுதியான ஜனசக்தி சேஃப்டி நெட்,  குறைந்த வருமானமுடையவர்களை இலக்காகக் கொண்டு தினசரி 55சதத்துக்கு ரூ. 100,000 பெறுமதியான காப்புறுதியை வழங்கும் ஜனசக்தி செனசும ஆகியனவும் துறைசார் முதலாவதுகளாக உள்ளன. பாரம்பரிய ஆயுள் காப்புறுதிக்கு அப்பாற்பட்டு, இலங்கையின் முதலாவது முதலீட்டு அடிப்படையிலான காப்புறுதி திட்டமான  ஜனசக்தி ஆயுள் முதலீட்டு கணக்கு உள்ளது.

புத்தாக்கம், உந்துசக்தி மற்றும் சமூக பொறுப்புணர்வுள்ள ஒரு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ள ஜனசக்தி காப்புறுதி பி.எல்.சி, அதன் சேவைக் காலத்தில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் நாட்டுக்கு பாரிய நம்பகத்தன்மையுடனான பெறுமதியை வழங்கி வருகின்றது.

0 comments:

Post a Comment