Tuesday, December 20, 2011

ஐ.தே.க.வின் புதிய தலைவர்களுக்கு அம்பாரை மாவட்ட மக்கள் வாழ்த்து


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தாவில் நடைபெற்ற கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தெரிவு வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தயா கமகே அவர்களுக்கும் அம்பாரை மாவட்ட மக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

விஷேடமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த தயா கமகே அவர்கள் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இப்பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு அவர் செய்த அளப்பரிய சேவைக்கும், அவர் மீது இப்பிராந்திய மக்கள் கொண்டுள்ள நட்புக்கும் கிடைத்த கௌரவம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment