
(எஸ்.எல்.மன்சூர்)
உலகின் செல்போன் தயாரிப்பில் நம்பர் 1 எனப்படும் நொக்கியா நிறுவனம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இன்றைய உலகில் இன்றைக்கு வரும் வரையில் செல்போன் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன்றில் காணப்படுவது நொக்கியா நிறுவனமேயாகும். இதில் உலகில் 36 சதவீதமான செல்போன்களை இந்நிறுவத்தின் மூலம் உற்பத்தியாகும் செல்போன்களின் விற்பனை பெற்றுள்ளது.
இவர்களது முதலாவது செல்போன் 1982ஆம் ஆண்டில் Mobira Senator எனும் மொடலில் வெளியாகின. நொக்கியாவின் Nokia 1100 எனப்படும் மொடல் போன்கள் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட தொகையானவை நைஜீரியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதுவரை ஏறக்குறைய 400 டிசைன்களில் செல்போன்களை வெளியிட்டுள்ளனராம். 1994ஆம் ஆண்டில் வெளியான முதல் ஹிட் 2100 எனப்படும மொடல் வெளியாகி 20 மில்லியன்கள் தொகை கொண்ட போன்கள் விற்பனையாகியதாம். உலக அளவில் சுப்பர் ஹிட் ஆன நொக்கியா 3310, 3330 மொடல்கள் 126 மில்லியன்கள் விற்று சாதனை படைத்ததாம்.
இந்த 126 மில்லியன் போன்களையும் வரிசைப்படுத்தி அடுக்கினால் 13.500 கிலோமீற்றர் தூரத்தினை எட்டுமாம். 2004 இல் நொக்கிய நிறுவனத்தால் 207.7மில்லியன் செல்போன்கள் தயாரிக்கப்பட்டது. அதாவது 6.5 வினாடிகளுக்கு ஒரு போன் என்ற அடிப்படையில் இது அமைந்துள்ளது. நொக்கியா போனில் ளுஆளு வந்தால் ஒலிக்கும் ஒலி உண்மையில் SMS என்ற வார்த்தையின் மோர்ஸ்கோடாம் (Morse code) என்றும் கூறப்படுகிறது.
கமாரக்களைக் கொண்ட போன்களின் ஆதிக்கம் இப்போது அதிகமாக வெளிவருவதால் உலகளவில் இப்போதைக்கு அதிக டிஜிட்டல் கமரா தயாரிப்பளர்களாகவும் இந்த நொகியா நிறுவனத்தினரே காணப்படுகின்றனர். அதிகளவில் திருட்டுக்கு உள்ளாகும் போன்களும் இந்த நொகியா போன்களேதானாம். நொக்கிய ரிங்டோன் எனப்படும் அந்த புகழ்பெற்ற ரிங்டோன் இசையானது 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஸ்பானியா கிடார் இசைக் கலைஞரின் (Francisco Tarrega) இசையை அடிப்படையாகக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
உலகின் முதல் GSMயைப் பண்ணியர் முன்னாள் பின்லாந்து பிரதமர் Harri Holkeri ஆவார். இந்த அழைப்பு 1991ஆம் ஆண்டில் ஹெல்சிங்கில் ஒரு நொக்கியா போனைப் பயன்படுத்தி உண்டாக்கப்பட்டது. நொக்கியா நிறுவனம் போன்கள் தவிர, பிற Digital Televisions, ADSL Modems, Wireless LAN interfaces, Telephone switches, GPS devices, Terrestrial trunked radios இன்னும் Security Solutions தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இதன் தலைமைக் காரியாலயம் பின்லாந்தில் Nokianvirta ஆற்றின் கரையோரம் Keilaniemi, Espoo, Finland இல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment