(கலாநெஞ்சன்)
பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி அரிசி மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிப்பதற்காக, அரசாங்கம் விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அரிசிக்கான பற்றாக்குறையை தோற்றுவித்து விலையினை அதிகரிக்க ஒருசில வர்த்தகர்கள் முயற்சிப்பதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. தேவைப்படும் பட்சத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டொன் நெல்லினை அரிசியாக மாற்றியமைக்க நெற் சந்தைப்படுத்தும் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டொன் நெல், களஞ்சியசாலையில் இருப்பதாக நெற் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் கே.பி. ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பற்றாக்குறையின்றி அரிசியை விநியோகிக்க நெற் சந்தைப்படுத்தும் சபைக்கு முடியுமென அவர் தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக சதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் போதியளவு அரிசி இருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment