Monday, December 19, 2011

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் டவ் நிறுவன 'லோகோ' நீக்கம்


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து சர்ச்சைக்குரிய 'டவ் கெமிக்கல்ஸ்' நிறுவனத்தின் 'லோகோ' நீக்கப்படுகிறது. கடந்த 1984இல் ம.பி.யின் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு முறையான நிவாரணம் வழங்கப்படாத நிலையில், யூனியன் கார்பைடு நிறுவனத்தை, அமெரிக்காவின் 'டவ் கெமிக்கல்ஸ்' வாங்கியது. 

இந்த நிறுவனம் லண்டனில் வரும் 2012இல் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் அனுசரணையாளராக உள்ளது. இதற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 'டவ் கெமிக்கல்ஸ்' நிறுவனம், தனது 'லோகோவை' ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் இருந்து நீக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.) தற்காலிக தலைவர் வி.கே. மல்கோத்ரா கூறுகையில், 'இந்த முடிவில் மகிழ்ச்சி இல்லை. 'லோகோவை' நீக்குவதால் என்ன பயன் இருக்கிறது. 'டக் கெமிக்கல்ஸ்' நிறுவனத்துடனான அனுசரணை ஒப்பந்தத்தை இரத்து செய்யவேண்டும் வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை' என்றார்.

0 comments:

Post a Comment