Saturday, December 31, 2011

சினேகா, பிரசன்னா ஜோடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை


புகழ்பெற்ற கடப்பா தர்காவிற்கு நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ஜோடியாக சென்று பிரார்த்தனை செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் கடப்பாவில் புகழ்பெற்ற தர்கா உள்ளது. மதசார்பின்றி அனைத்து பிரபலங்களும் இந்த தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கடப்பா தர்காவில் அடிக்கடி மலர் போர்வை போர்த்தி வழிபடுவது வழக்கம். இந்த தர்காவுக்கு நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் ஜோடியாக சென்றுள்ளனர். இருவரும் மலர் போர்வை போர்த்தி பிரார்த்தனை செய்துள்ளனர்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இதையொட்டி தர்காவில் தங்களது திருமணம் இனிதே நடைபெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் எங்கு சென்றாலும் ஜோடியாகவே செல்கின்றனர்.

0 comments:

Post a Comment