
நாட்டுக்கு மக்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா மக்களின் நலன்களுக்காக இப் புதுவருடத்தில் அனைத்து கட்சிகளும் மக்களும் அரசின் ஆக்கபூர்வமான அபிவிருத்தித் திட்டங்களுக்காக அரசுடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் விடுத்திருக்கும் புது வருட வாழ்த்து செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மலர்ந்திருக்கும் புதுவருடம் இந்நாட்டு மக்களின் வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் மிகவும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழும் சூழல் உருவாக வேண்டும். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்ற பிரிவுகளில் எமது நாடு முன்னேற்றத்தை அடைய வேண்டும். அவற்றின் ஊடாக மக்கள் நன்மை அடைய வேண்டும்.
எமது அரசைப் பலப்படுத்தி அதை நாட்டின் முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்ய இந்நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் மலர்ந்திருக்கும் இந்த புது வருடத்தில் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்மூலம், நாம் நாட்டு மக்களுக்கு நல்ல பல சேவைகளை செய்யும் வாய்ப்பைப் பெறவேண்டும்.
0 comments:
Post a Comment