
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், சீனாவின் அமைதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரஷ்ய தேர்தலில் பிரதமர் புடின் சார்ந்துள்ள ஐக்கிய ரஷ்ய கட்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. புடினை எதிர்த்து மாஸ்கோ உள்பட பல நகரங்களில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. அமெரிக்கா தான் ஆர்ப்பாட்டத்தை தூண்டி விடுகிறது என்று புடின் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்நிலையில், புடினுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன், சீனாவின் கன்பூசியஸ் அமைதி விருதுக்கு புடின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விருது வழங்கும் அமைப்பின் நிறுவனர் கியாவோ டமோ கூறுகையில்,
Ôலிபியா மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்துவதற்கு புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதற்காக சீனாவின் அமைதி விருதுக்கு அவரை தேர்ந்தெடுத்துள்ளோம் என்றார்.
சீனாவில் சர்வதேச அமைதி கல்வி மையம் நடத்தி வருகிறார் கியாவோ. அமைதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து புடினிடம் இருந்து கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த விருது வழங்க சீன அரசு அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று கியாவோ அமைதியாக கூறுகிறார்.
0 comments:
Post a Comment