
சிவனொளிபாத மலை யாத்திரைக்கான பருவகாலம் நேற்று சனிக்கிழமை பூரணை தினத்திலிருந்து ஆரம்பமானது. யாத்திரைக்கான பருவ காலத்தை முன்னிட்டு சிவனொளிபாத மலையிலுள்ள நல்ல தண்ணீர் நகரிலிருந்து மலையுச்சி வரை தற்காலிக கடைகள் பலவும் திறக்கப்பட்டுள்ளதோடு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
யாத்திரிகர் நலன் கருதி அட்டன் நல்ல தண்ணீர் ரயில் இணைப்பு பஸ் சேவையை அட்டன் டிப்போ ஆரம்பித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக தனித்தனியே பஸ்தரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விசேட ஒலிபரப்புச் சேவையும் இடம்பெறவுள்ளது.
பருவ காலத்தில் பெருந்தொகையான வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகை தரவுள்ளதால் ஆடம்பர ஹோட்டல்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. 2012ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவ காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வெசாக் பண்டிகையுடன் நிறைவு பெறும்.
0 comments:
Post a Comment