Wednesday, December 21, 2011

விஸ்டம் ஆங்கில பாலர் பாடசாலையின் விடுகை விழா




(எஸ்.எம்.அறூஸ், எப்.எம்.முர்தளா) 
அட்டாளைச்சேனை விஸ்டம் ஆங்கில பாலர் பாடசாலையின் விடுகை விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது. விஸ்டம் அகடமியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.இர்பான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து சிறப்பித்தார். 

கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நஸீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். வாஹிட், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.குணபாலன், பிரதேச சபை உறுப்பினர்களான அப்துல் முனாப் , எஸ்.எல். முனாஸ் ஆகியோhகள் கலந்து  சிறப்பித்தனர். முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள் இங்கு சிறந்த முறையில் இடம்பெற்றது.








0 comments:

Post a Comment