Tuesday, December 20, 2011

சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை


(எம்.ஐ.எம்.  பைஷல்) 
கடல் மீன்பிடி மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதற்கு சட்ட விரோதமான உபகரணங்களை பாவித்த குற்றத்திற்காக 569 பேருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்ககள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த கடல் மீன்பிடி மீனவர்களே அதிகளவில் ஈடுபட்டு சட்ட விரோத உபகரணங்களை பாவித்து வருவதாகவும் மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடல் மீன்பிடிக்காக தடைசெய்யப்பட்ட வலைகள், ட்ரோலர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இச்செயலில் ஈடுபட்டு வந்தவர்களின் சட்ட விரோத உபகரணங்களும், மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை பாவித்து மீன்பிடிக்கும் கடல் மீனவர்கள் பற்றி அறியக் கிடைத்தால் உடனடியாக மீன்பிடி அமைச்சுக்கு தெரியப்படுத்தமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment