Tuesday, December 13, 2011

இலங்கையில் முதலீடு செய்ய கட்டார் தயார்


இலங்கையில் பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்வதற்கு தமது அரசாங்கமும் முதலீட்டாளர்களும் தயாராக இருப்பதாக கட்டார் பிரதமர் ஷெய்க் ஹமாட் பின் அல்தானி குறிப்பிட்டுள்ளார்.
   
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த போதே கட்டார் பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இதன்போது பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் வடபகுதி மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கட்டார் பிரதமருக்கு தெளிவுபடுத்தினார்.

சுற்றுலா ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பாரிய ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்கு தமது நாட்டு முதலீட்டாளர்கள் தயாராக உள்ளதாக கட்டார் பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைகளிலும் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்த கட்டார் பிரதமர் ஷெய்க் ஹமாட் அல்தானிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இராப்போசன விருந்தளித்து கௌரவித்தார். கட்டார் பிரதமருடன் அந்நாட்டு நிதியமைச்சர் மற்றும் பிரபல வர்த்தகர்கள் குழுவொன்றும் இலங்கை வந்துள்ளனர்.

குறுகியகால இலங்கையின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கட்டார் ஜனாதிபதி, இலங்கைக்கான தமது விஜயம் குறித்து பெருமைப் படுவதாகவும் கூறினார்.




0 comments:

Post a Comment