Thursday, December 08, 2011

பாலா படத்திற்காக மோதும் வேதிகா, தனன்யா

பாலா படத்தின் வேலைகள் பரபரப்பாக ஆரம்பித்திருப்பதை முன்பே குறிப்பிட்டிருந்தோம். அதர்வா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள்?

பொதுவாக தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை அவ்வளவு எளிதில் முடிவு செய்துவிட மாட்டார் பாலா. மனதில் தோன்றுகிற ஹீரோயின்களை அழைத்து அவர்களுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்து சில நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தி பார்த்து எல்லாம் பிடித்திருந்தால்தான் அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும். இந்த கதவின் சாவியை தன்னிடமே வைத்திருந்தவர் பாலா காம்பவுண்டில் லைலா என்ற அழகி மட்டுமே.

அதர்வா படத்தின் லைலா யார் என்ற கேள்வி எல்லாருக்கும் எழும் அல்லவா? கடந்த சில வாரங்களுக்கு முன் வேதிகாவை அழைத்து அவருக்கு அட்வான்சே கொடுத்துவிட்டார்களாம் பாலா தரப்பில். இந்த வேதிகா சிம்பு, அருண் விஜய் ஆகியோருடன் நடித்தவர். தொட்டால் ஒட்டிக் கொள்ளும் சிவப்பு வேறு. (இது பாலா ஃபார்முலா இல்லையே) தற்போது மேலும் ஒரு ஹீரோயினை வரவழைத்து மேக்கப் டெஸ்ட் போட்டிருக்கிறார் அவர்.

குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் என்ற படத்தில் நடித்த தனன்யா என்ற நடிகைதான் அவர். பாலாவுக்கு பிடித்த மாநிற அழகிதான் இவர். மருத்துவக் கல்லூரி மாணவியான இவர், இதற்கு முன்பே பாலா தன் படத்தில் நடிக்க அழைத்தபோது படிப்பை காரணம் காட்டி விலகிக் கொண்டாராம். இந்த முறை அவரே ஆர்வத்துடன் வந்திருக்கிறார்.

கூட்டல், கழித்தல், பெருக்கல் என்று ஆயிரம் சோதனைகள் இருக்கிறது. அப்புறம்தானே முடிவு தெரியும்?

0 comments:

Post a Comment