Thursday, December 08, 2011

கட்டார் நிதியுதவியுடன் வீடுகள் புனரமைப்பு


(கலாநெஞ்சன்) 
கட்டார் நாட்டின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் ஹிஸ்புல்லா கிராமத்தில் உள்ள வீடுகளை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் எயிட் அமைப்பின் மூலமாக மேற்கொள்ளப்படும் இப்புனரமைப்பு நடவடிக்கையினை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார். இந்த நடவடிக்கையின் கீழ் முதற்கட்டமாக 17 வீடுகள் புனரமைக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்காக 50 இலட்சம் ரூபா நிதியை கட்டார் நாடு வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment