Thursday, December 15, 2011

அம்பாரை மாவட்ட வர்த்தக சம்மேளன செயலமர்வு


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
வியாபாரத்துக்கு நேசமான சூழல் ஒன்றை உருவாக்குவதனூடாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை மெம்படுத்தும் நோக்குடன் கிராமிய தொழில் முயற்சியாளர்கள் ஒன்றியம் மற்றும் அம்பாரை மாவட்ட வர்த்தக சம்மேளனம் என்பன ஒன்றிணைந்து சம்மாந்துறை பிரதேச வர்த்தகர்கள் மற்றும் சிறு முயற்சியாளர்கள், வங்கி முகாமையாளர்கள், திணைக்கள உயரதிகாரிகளுக்கான செயலமர்வு இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், உதவி தவிசாளர் எம்.ஐ.கலீலுர் றஹ்மான், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் உதவி வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி தயரத்ன, பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ. ஜப்பார், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், அம்பாரை மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக ரூபசிங்க, அதன் கணக்காளர் புத்திக பிரசன்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.



0 comments:

Post a Comment