(எஸ்.எம். அறூஸ்)
அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் 2009-2010 ஆம் வருடங்களில் ஆசிரிய பயிற்சி முடித்து சித்தியடைந்த ஆசிரிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கலாசாலை அதிபர் மௌலவி எம்.எஸ். அப்துல் ஹபீழ் தலைமையில் நடைபெற்றது.
இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். ஜெய்னுதீன் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் கலந்த கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி அதிபர் மௌலவி வீ.ரி.எம்.ஹனீபா மற்றும் நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல். சலீம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 11 பாடநெறிகளைச் சேர்ந்த சுமார் 300 பயிற்சி ஆசிரியர்கள் தமக்குரிய சான்றிதழ்களை அதிதிகளிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
0 comments:
Post a Comment