
கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பண்டிகையை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதி குறித்த பஸ் சேவையை ஏற்பாடு செய்யவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கனேபொல தெரிவித்தார்.
அனைத்து மாவட்டங்களிலும் நெடுத்தூர பஸ் சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணை மற்றும் விடுமுறைகள் என்பன 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி வரை தடை செய்யப்பட்டிருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாகாண அதிகாரிகள்- பஸ் நிறுவனங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சபை ஆகியவற்றுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கனேபொல தெரிவித்தார்.
இதற்கென குறிப்பிட்ட தொகை பஸ்களை தயார் நிலையில் வைத்திருப்பதேடு மக்களின் நலன் கருதி 24 மணி நேர போக்குவரத்து சேவையை வழங்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment