அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஹோட்டலில் உள்ளூர்வாசிகள் சிலருடன் ஏற்பட்ட மோதலில் பிரித்தானிய பிரஜை கொல்லப்பட்டதுடன் அவரின் மனைவி காயமடைந்ததாகவும், காயமடைந்த அவர் தற்போது காலி கராப்பிட்டிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய குற்றப்புலனாய்வுப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த குரும் ஷேக் என்ற செஞ்சிலுவை சங்க தொண்டர் சேவையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment