வேனும் (van) தனியார் பஸ் வண்டியும் மோதியதில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தலேயே பலியாகியுள்ளார்.இச் சம்பவம் இன்று பிற்பகல் (25-12-2011) 1.30 மணியளவில் நீர்கொழும்பு - தளுவகொட்டுவ பிரதேசத்தில், நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் இடம் பெற்றது.
ஆணமடுவயிலிருந்து நீர்கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த டொயட்டா ரக வேனுடன், கொழும்பிலிருந்து கல்பிட்டிய நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி மோதிய இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.வேனின் சாரதியான 29 வயதுடைய நபரே சம்பவத்தில் பலியானவராவார். சம்பவத்தை அடுத்து கொச்சிக்டை பொலிஸார் பஸ் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர்.மரணமடைந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.




0 comments:
Post a Comment