
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் விவகார திறன்கள் விருத்திஅமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த டூவர் டீ ஸ்ரீலங்கா யூத் தேசிய சைக்கிளோட்டப்போட்டியில் முதல் மூன்று இடங்களையும் இலங்கை இராணுவப் படைவீரர்கள் பெற்றுக்கொண்டதுடன் இன்று போட்டி கோலாகலமாக நிறைவு பெற்றது.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட டுவர் டி ஸ்ரீலங்கா யூத் சைக்கிள் ஓட்டப்போட்டி மட்டக்களப்பிலிருந்து மாத்தறை வரை இடம்பெற்றது.
இந்த போட்டி கடந்த 08ஆம் திகதி காலை 8.30 அளவில் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டு போட்டியின் முதல் கட்டம் சியமம்பலாண்டுவையில் சுமார் 11.45 அளவில் நிறைவடைந்தது. போட்டியின் முதல் கட்டத்தில் முதலாம் இடத்தை இராணுவத்தை சேர்ந்த திலீப பிரபாத் பெற்றுக்கொண்டார்.



இரண்டாம் இடத்தை இராணுவத்தை சேர்ந்த சமீர சதுரங்க பெற்றுக்கொண்டுள்ளதுடன் மூன்றாம் இடத்தை இலங்கை பொலிஸ் பிரிவை சோர்ந்த சுதீர நிலங்க பெற்றுக்கொண்டார். இந்நிலையில் இரண்டாம் கட்டம் நேற்றைய தினம் (09.12.2012) சுமார் 8.30 அளவில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்டம் சியம்பலாண்டுவையில் ஆரம்பிக்கப்பட்டு திஸ்ஸமஹராமாவில் சுமார் 12.00 மணியளவில் நிறைவடைந்தது. இந்த இரண்டாம் கட்ட நகர்விpல் முதலாம் இடத்தை விமானப்படையை சேர்ந்த ஜீவன் ஜயசிங்க பெற்றுக்கொண்டதோடு, இரண்டாம் இடத்தை விமான படையை சேர்ந்த நவீன் ருச்சிர பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தை கடற்படையை சேர்ந்த ஜானக ஹேமந்த குமார பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, (10.12.2011) மட்டக்களப்பிலிருந்து மாத்தறைவரையிலான சைக்கிள் ஓட்டப்போட்டியின் மூன்றாம் கட்ட நகர்வு இன்று காலை 8.30 அளவில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் திஸ்ஸமஹராமவில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய இறுதி போட்டியில் முதலாம் இடத்தை இராணுவத்தை சேர்ந்த லக்ஸ்மன் விஜயரத்ன பெற்றுக்கொண்டார்.



முதலம் இடத்தை பெற்றுக்கொண்ட லக்ஸ்மன் விஜயரத்தன என்பவருக்கு தொடரை நிறைவு செய்ய 8 மணித்தியாலங்கள் 24 நிமிடம் 32 வினாடிகள் தேவைப்பட்டன. இதேவேளை, 8 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் 45 வினாடிகளில் இராணுத்தை சேர்ந்த திலீப பிரபாத் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தை இராணுவத்தை சேர்ந்த சமீர சதுரஜங்க 8 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் 50 வினாடிகளில் நிறைவு செய்தார்.
இதற்கமைய முதலாம் பரிசாக அதிநவீன கார் வழங்கப்பட்டதோடு இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் தலா ஒவ்வொன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிரத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும், மாத்தறை நகரசபை தலைவர் சொசீந்த அந்துன்கே, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் ஹேமால் குணசேகர மற்றும் தென்மாகாண சபை உறுப்பினர் காஞ்சன விஜயசேகர உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்றைய போட்டியை சபாநயகர் சமல் ராஜபக்ஷ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் பியூம் பெரேரா ஆகியோர்ஆரம்பித்து வைத்தனர்
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் மைதானத்தில் வைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment