(எஸ்.எம்.அறூஸ், எப்.எம்.முர்தளா)
மண்முனைப்பற்று பிரதேச கலாசாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2011ஆம் ஆண்டுக்கான பிரதேச சாஹித்திய விழா ஆரையம்பதி நந்தகோபன் கலையரங்கில் பிரதேச செயலாளரும், கலாசார பேரவையின் தலைவருமான கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் முன்னாள் வட, கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் எஸ்.எதிர்மன்ன சிங்கம்,கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே.கந்தசாமி உட்பட கலைஞர்கள், கல்விமான்கள்,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். விழாவிற்குரிய ஏற்பாடுகளை கலாச்சார உத்தியோகத்தர் ச.சோமசுந்தரம் தலைமையில் கலாசார அபிவிருத்தி உதவியாளர் ஏ.எல்.முசாதீக் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
இங்கு பிரதேச கலைஞர்கள் 10 பேர் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். ஆரையம்பதி மகா வித்தியாலயம் மற்றும் ஆரையம்பதி இராமகிருஸ்ணமிஷன் வித்தியாலய மாணவர்களால் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது சிகரம் விழா சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment