Sunday, December 11, 2011

மரக்கறி, பழ வகைகளை கொண்டு செல்ல புதிய நடைமுறை

(கலாநெஞ்சன்)
மரக்கறி மற்றும் பழ வகைகளை கொண்டு செல்வதற்காக, பிளாஸ்டிக் கூடை பயன்பாடுஇன்று தொடக்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின்சட்டத்திற்கமைய இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்வெளியிடப்பட்டுள்ளது.

இலகுவில் பழுதடையக்கூடிய மரக்கறி வகைகள் மற்றும் பழ வகைகளை கொண்டுசெல்லும்போது, பொதிகளை பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் அல்லது பலகையினால்ஆக்கப்பட்ட கூடைகளில் இவ்வாறான பொருட்களை கொண்டு செல்ல வேண்டுமென, வர்த்தமானிஅறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு சில மரக்கறி வகைகளுக்கு, பிளாஸ்டிக் கூடை அவசியமில்லை. வாழைப்பழம்,அன்னாசி போன்ற பழ வகைகளுக்கும் இது அவசியமில்லை.

புதிய சட்டம் முறையாக அமுல்ப்படுத்தப்படுமென அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோதெரிவித்துள்ளார்.இதேவேளை, இன்று நள்ளிரவின் பின்னர் இந்த பொதியிடும் முறையை பயன்படுத்தாமல்மரக்கறி மற்றும் பழவகைகளை ஏற்றிச் செல்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கைஎடுக்கப்படும் என்று கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர்சுனில் எஸ் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதன் படி 13 வகையான பழங்கள் மற்றும் 24 வகையான மரக்கறிகளை ஏற்றிச் செல்வதற்காகஅனுமதிக்கப்பட்ட பொதியிடல் முறை பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் செயலாளர்சுனில் எஸ் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment