Thursday, December 15, 2011

ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ்

ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள், நேற்று முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டன. குவைத்தை ஆக்ரமித்த காரணத்தால், ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. அதன்பின், சதாம் உசேன் ஆட்சி ஒழிக்கப்பட்டது. அதுமுதற்கொண்டு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக, அமெரிக்க படைகள் ஈராக்கில் நிலை கொண்டிருந்தன. ஆரம்பத்தில், ஒரு லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க வீரர்கள், ஈராக்கில் முகாமிட்டிருந்தனர். அதன்பின், படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்பட்டு வந்தன. ஈராக் சென்ற அமெரிக்கப் படையில், 4 ஆயிரத்து 500 வீரர்கள் பலியாயினர்.

ஈராக் அரசுடன் செய்த ஒப்பந்தத்தின் பேரில், இந்த ஆண்டோடு, அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புகின்றனர்.இதுகுறித்து, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனிடா குறிப்பிடுகையில், "அமெரிக்கப் படைகள், ஈராக்கிலிருந்து முற்றிலும் வாபஸ் பெறுவதற்கு அடையாளமாக, பாக்தாத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்கக் கொடி இறக்கப்பட்டு விட்டது. தற்போது, ஈராக்கில் உள்ள 4 ஆயிரம் அமெரிக்க வீரர்கள், இரண்டு வார காலத்தில், தாயகம் திரும்புவார்கள்' என்றார்.

0 comments:

Post a Comment