Monday, December 19, 2011

பராக்கிரம சமுத்திர வான் கதவுகள் திறப்பு; தென்கிழக்கிலும் காற்றுடன் கூடிய மழை

(எஸ்.எல்.மன்சூர்) 
நாட்டின் தற்போதைய காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்ற நிலையில் பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் பத்து தற்போது திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாக அதன் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்தும் மழை பெய்யுமாக இருந்தால் மேலும் வான் கதவுகள் திறக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு திறக்கப்பட்டுள்ள வான்கதவுகளின் ஊடாக செக்கன் ஒன்றிக்கு 350 கனவளவு நீர் வெளியேற்றப்படுகிறது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை தென்கிழக்குப் பிரதேசத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. தற்போது கிழக்கு மாகாணம் முழுவதும் அடைமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக அம்பாரை மாவட்டத்திலுள்ள நெல் வயல்கள் மீண்டும் வெள்ளத்தினுள் மூழ்கியுள்ளது. கிழக்கில் கடற்காற்று அதிகமாக வீசுவதால் கடற்றொழிலாளர்களும் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலைக்கு நுகர்வோர் தள்ளப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment