Wednesday, December 28, 2011

அனஸ் ஸீனா ஷிபா, காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயம்


காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவி அனஸ் ஸீனா ஷிபா விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாமிடத்திலும் தேசிய மட்டத்தில் 36ஆவது சித்தி பெற்றுள்ளார். இவர் சுப்பர் மெரிட் எனப்படும் தேசிய ரீதியிலான தெரிவு அடிப்படையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்.

ஆங்கில ஆசிரியர் ஆர்.ரி.எம். அனஸ் மற்றும் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் ஜனாபா உம்மு பரிதா அனஸ் ஆகியோரின் புதல்வியான மேற்படி ஷிபா மாவட்டத்தில் 2ஆவது இடத்தினை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி ஜாமியதுஸ் சித்தீக்கியா மகளிர் அரபுக் கல்லூரியில் பாடநெறியைப் பூர்த்தி செய்த மௌலவியாவான  இந்த மாணவி 2008ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சையிலும் 9 பாடங்களிலும் ஏ சித்தியினை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றதுடன் 2002ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றிருந்தார்.

இந்த மாணவி அகில இலங்கை ரீதியாக நடை பெற்ற தமிழ் தினப்போட்டியிலும் பங்கு பற்றி தங்கப்பதக்கம் பெற்றதுடன் தேசிய மட்டத்தில் பௌதீகவியல் ஒலியம்பியாட் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுள்ளார் அத்தோடு பேராதனை பல்கலைக்கழகம் விஞ்ஞான பீடம் நடாத்திய உலக சத்துணவு போட்டியில் பங்கு கொண்டு முதலாமிடத்தையும் பெற்றுள்ளார்.

0 comments:

Post a Comment