(எஸ்.எல். மன்சூர்)
அட்டாளைச்சேனை பிரதான வீதி நவீன முறையில் புனரமைக்கப்பட்ட பின்னர் தற்போது அடிக்கடி வீதி விபத்துக்கள் நடக்கின்றன. இவ்வீதியில் ஒரு நிமிடத்திற்கு நான்கு விபத்துக்கள் ஏற்படுவதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. நிலையில் பாதசாரிகளும், வாகனத்தில் பயணிப்போரும் அவதானமாக செல்லவேண்டும் என்ற விதிகளை அறிந்திருந்தாலும், கவனயீனத்தினாலேயே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் இருந்தாலும் பயணிப்போர் கவனமில்லாத நிலையில் ஏற்படும் வீதி விபத்துக்களே அதிகமாகும். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை சற்றுநேரத்துக்குமுன் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றின்போது பொலிஸார் அங்கு விசாரணை நடத்துவதை இங்கு காணலாம்.



0 comments:
Post a Comment