(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக சாய்ந்தமருது பிரதேசத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.ஐ.எம்.தௌபீக் அம்பாரை மாவட்ட செயலாளரால் நியமிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனைக்குடியை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதுவை வசிப்பிடமாகவும் கொண்ட தௌபீக், 1981ஆம் ஆண்டு விசேட சேவை உத்தியோகத்தராக அரச சேவைக்குள் உழ்வாங்கப்பட்ட இவர் 1987ஆம் ஆண்டு கிராம சேவை உத்தியோகத்தராக நியமனம் பெற்றார். பின்னர், 2001ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்கு தோற்றி அவ்வாண்டில் ஆகக் கூடிய 222 புள்ளிகளைப் பெற்று நிர்வாக சேவைக்குள் நுளைந்தார்.
பின்னர், 2003 தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய பின்னர் 2006 தொடக்கம் 2012.12.11ஆம் திகதி வரை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பின்னர் 2012.12.12 ம்திகதி சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
0 comments:
Post a Comment