Saturday, December 10, 2011

இலங்கை போக்குவரத்து சபையின் தினசரி வருமானம் அதிரடியாக உயர்ந்துள்ளது


(கலாநெஞ்சன்) 
இலங்கை போக்குவரத்து சபையின் தினசரி வருமானம் துரிதமாக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இலங்கை போக்குவரத்து சபையின் இவ்வாண்டு தினசரி வருமானம் 10 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சபையின் தலைவர் எம்.டி. பந்துசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் கடந்த வருட வருமானத்துடன் ஒப்பிடும்போது, 2011 ஆம் ஆண்டு தொடர்பில் நாம் மகிழ்ச்சியடையலாம். கடந்த ஆண்டை விட இவ்வருடம் இலங்கை போக்குவரத்து சபை நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட வருமானத்தை ஈட்டியுள்ளது.

2009 மற்றும் 2010 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 4 மில்லியன் ரூபாவாக இருந்த தினசரி வருமானத்தை, 2011ஆம் ஆண்டில் 45 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் கட்டண திருத்தத்திற்கு முன்னரே இந்த நிலைமை காணப்பட்டது. கடந்த வருடம் 40 பஸ் டிப்போக்கள் மட்டுமே சிறப்பாக இயங்கியது. தற்போது 15 பஸ் டிப்போக்களை விட ஏனைய பஸ் டிப்போக்கள் அனைத்தும் தமது சொந்த வருமானத்தில் ஊதியத்தை
செலுத்தக்கூடியதாகவுள்ளது.

0 comments:

Post a Comment