Saturday, December 10, 2011

அல்-மனார் வித்தியாலயத்தில் இருவேறு நிகழ்வுகள்


(ஏ.ஜே.எம்.ஹனீபா) 
சம்மாந்துறை அல்-மனார் வித்தியாலயத்தின் அனுசரனையுடன் இயங்கி வரும் மில்ஹான் முன்பள்ளி மாணவர்களின் விடுகை விழாவும், அல்-மனார் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை வித்தியாலய முன்றலில் அதிபர் ஐ.எல்.எம்.நிசார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.அஸீஸ்மீடீன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக சிறுவர் நன்னடத்தை மாவட்ட தலைமை அதிகாரி ஏ.எம்.உதுமாலெப்பை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவிஞர் மன்சூர் ஏ காதிர், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி நியாஸ் அஹமட், சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி அதிபர் ஹபீறா சலீம் உட்பட ஆசிரியர்கள உலமாக்கள் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.








0 comments:

Post a Comment