Sunday, December 11, 2011

கட்டார் பிரதமர் இன்று இலங்கை வருகின்றார்


கட்டார் பிரதமர் ஷெய்க் ஹமாட் அல்தானி உள்ளிட்ட குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றனர்.

கட்டார் தூதுக்குழுவினரை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரதமர். டி.எம்.ஜயரட்ன ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பர். இருநாடுகளுக்கு இடையோன நட்புறவை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையில் இவ் விஜயம் அமையும் என நம்பப்படுகிறது.

இலங்கை வரும் கட்டார் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment