( எம்.ஐ.எம். அஸ்ஹர்)
சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாலியல் தொற்று நோய் பிரிவும் பொத்தவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து எயிட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் , விழிப்பு
கருத்தரங்கு மற்றும் எயிட்ஸ் தொடர்பான நூல் வெளியீட்டையும் மேற்கொண்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.எஸ். இப்ராலெப்பையின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.எம்.அப்துல் மஜீட், விஷேட அதிதிகளாக பெத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.இஸ்ஸதீன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.பஷீர் மற்றும் பிரதி தவிசாளர் எம்.தாஜுத்தீன் உட்பட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாலியல் தொற்று நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.





0 comments:
Post a Comment