Saturday, December 31, 2011

புதுவருட வாழ்த்துச் செய்தி - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல


மனித சமூகம் புதியவற்றை அனுபவிப்பதற்கும், புதியவற்றை பெற்றுக்கொள்வதற்கும் புதுவருடத்தில் காட்டும் ஆர்வம் காரணமாகவே மக்கள் மத்தியில் புதுவருடத்தின் முதல் நாள் புதிய உணர்வுகளை ஏற்படுத்துகின்றது. வெகுசன ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது எதிர்கால எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்வதற்கு எதிர்பார்க்கும் மனிதன், தமது வாழ்வினை நல்லமுறையில் ஆரம்பிப்பதற்காக இன்றைய தினத்தில் திடசங்கற்பம் பூணும் சந்தர்ப்பங்கள் ஏராளம். சிறந்த சிந்தனைமிக்க நபர்களை நாம் எப்போதும் பாராட்டுதல் வேண்டும். முன்னேற்றம் அடைந்துவரும் ஒரு நாட்டிற்கு மிகவும் தேவைப்படுவது எதிர்காலத்தை எண்ணி கனவு காணும் மனிதர்களன்றி, எதிர்காலத்தை வெற்றிகொள்வதற்கு முயற்சிக்கும் செயற்திறன்மிக்க மனிதர்களாகும். புதிய எதிர்பார்ப்புக்களை இலக்காகக் கொண்டு செயற்படும் ஒரு சமூகம் மிகவும் முக்கியமானதாகும். தமது எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்வதற்கு நபர்கள் காட்டிவரும் தீவிர ஆர்வம் காரணமாக சிறந்த மனிதர்கள் உருவாகின்றனர். தமது இலக்குகளை வெற்றி கொள்வதற்குத் தேவையான சிறந்த மனிதவளம் மிக விரைவில் ஆசியாவின் புதுமை ஊடாக உருவாக்கப்படும் என்பது திண்ணம்.

நாளை பற்றி நம்பிக்கையின்றி மரண பயத்துடன் வாழ்ந்து வந்த யுகத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சுதந்திரமானதொரு தேசத்தை நாட்டு மக்களுக்குப் பெற்றுத்தந்த அரசாங்கமானது மக்களின் எதிர்பார்ப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொடுப்பதற்குத் தேவையான விடயங்களுக்கு எப்போதும் முன்னுரிமையளித்து செயற்பட்டு வருகின்றது. நம்பிக்கையுடன் உயிர்வாழக் கூடிய மற்றும் தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய சூழலொன்று புதிய இலங்கையினுள் தோற்றுவிக்கப்பட்டு விட்டது. எனவே தாய் நாட்டிற்கு அன்பு காட்டும் அனைவரதும் புத்தாண்டின் எதிர்பார்ப்பாக அமைய வேண்டியது யாதெனில் இலங்கையானது உலகில் செழிப்புமிக்க தேசமாக மாறுவதை தமது கண்களால் காணவேண்டும் என்ற ஆசையாகும்.

எனவே அவ்வாறான பொதுநோக்கை வெற்றிகொள்வதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக நாட்டிற்காக உழைப்போம். பிறந்துள்ள 2012 புத்தாண்டானது அனைவரதும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றக்கூடிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment