(முஹம்மட் பிறவ்ஸ்)
இலங்கை பற்றிய செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை பதிவுசெய்வதற்கு எதிராக ஸ்ரீலங்கா மிரர் இணையத்தளம் தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதிதாக இணையத்தளங்களை பதிவுசெய்யுமாறு தகவல், ஊடகத்துறை அமைச்சினால் அறிவித்தல் வழங்கப்பட்டிந்தது. இந்தத் தீர்மானத்தை உடனடியாக இடை நிறுத்துக்கோரி ஸ்ரீலங்கா மிரர் இணையத்தளம் அதிகாரிகள் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பில் தகவல் ஊடகத்துறை அமைச்சு இணையத்தளங்களை தொடர்ந்து பதிவுசெய்யுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் தற்போது 6 இணையத்தளங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீலங்கா மிரர் இணையத்தளமும் அடங்குகிறது. இது குறித்த முழுமையான விடங்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 15ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இலங்கையில் தங்களது இணையத்தளத்தை தடைசெய்தமையினால் வர்த்தக விளம்பரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் இருப்பதாகவும் ஸ்ரீலங்கா மிரர் இணையத்தளம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த தடையினால் தரவரிசையில் பின்தள்ளபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இணையத்தளங்களைப் பதிவு செய்வதற்கான மாதிரிப் விண்ணப்பப் படிவம்

0 comments:
Post a Comment