Friday, December 02, 2011

கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புண்டு


கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு கடற்பரப்புக்களில் அவ்வப்போது கடற்கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டிற்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் அவ்விடத்தை விட்டு அகன்றிருப்பதனால் இலங்கையின் காலநிலை மேலும் மோசமடைவதற்கு சாத்தியமில்லையெனவும் வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, வழமைபோல் நாடளாவியரீதியில் நண்பகல் வேளைகளில் இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்யக் கூடும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் ஓரளவு மழையை எதிர்பார்க்க முடியுமெனவும் அவர் கூறினார்.

மழையுடன் ஓரளவு காற்று வீசும் அதேநேரம் கடுங்காற்று வீசுவதற்கான வாய்ப்பில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். கடலில் சாதாரணமாக மணித்தியாலத்திற்கு 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் காற்று ஆகக்குறைந்தது 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசமுடியும். இதனால் கடற்கொந்தளிப்பு ஏற்படக்கூடுமெனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment