
(கலாநெஞ்சன்)
நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் சமுர்தி மகா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்தி நத்தார் கலை விழாவில் கொழும்பு அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வு நேற்று பிற்பகல் 3 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன, மேயர் அன்ரணி ஜயவீர இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். அருட் சகோதரர்கள், பிரதேச செயலாளர், மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என அதிக எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நீர்கொழும்பு வலய பாடசாலை மாணவர்கள் மத்தியில் கரோல் பக்தி கீதம் மற்றும் நத்தார் பாடல் அபிநய போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.





0 comments:
Post a Comment