ஏறக்குறைய 150 பிள்ளைகள் தங்கியிருக்கும் பிலியந்தலையில் அமைந்துள்ள SOS குழந்தைகள் கிராமத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் பீ.எல்.சி. (SLT) தமது சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை அண்மையில் மேற்கொண்டது. SOS சிறுவர் இல்லம் 10 பிள்ளைகள் தங்கியிருக்கும் 16 குடிசைகளைக் கொண்டுள்ளது.
அங்கு அவர்கள் தாய்மார்களினால் நன்கு கவனிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். இந்த நிறுவனத்தின் சகல பிரிவுகளிலுமுள்ள ஊழியர்கள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றுமாறு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தனித்தனிக் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு வீட்டிற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் விஜயம் செய்து பிள்ளைகளுக்கு புத்துணர்ச்சியூட்டுவதில் நேரத்தை கழித்தது. பிள்ளைகள் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும், மந்திரஜால வித்தை உட்பட பலவித விளையாட்டுகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அன்று மாலை நடந்த முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ஏசியா பவுண்டேசனின் ஒத்துழைப்புடன் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் அறிவு செல்வத்தைப் பரப்புதல் எனும் தொனிப் பொருளுடன் ஸ்ரீ லங்கா ரெலிகொம்மின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் புத்தக விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.
தோழமையுடன் கற்றல் உபகரணங்களை வழங்குதல் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்த உதவும் கம்பனியின் நோக்கத்தை அனாதை இல்லங்களில் செயற்படுத்தியது அதன் தொடர்ச்சியான சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.இந்த வருடம் விஜயம் செய்த ஏனைய மூன்று அனாதை இல்லங்களில் கேகாலை மாவட்டத்தில் மூன்றும் மாகொலயில் உள்ள இசுறு லமா நிவசவும் உள்ளடங்கும். இந்த வருடம் முடிவடைவதற்கு முன் இன்னும் பல விஜயங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான நிதி ஸ்ரீலங்கா ரெலிகொம் ஊழியர்களிடமிருந்து நன்கொடைத் திட்டத்தின்கீழ் நிதி சேகரிக்கப்பட்டது.


0 comments:
Post a Comment