(நமது செய்தியாளர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறும் இளைஞர் சைக்கிளோட்ட சவாரி இடம்பெறும் தினமான 8ஆம் திகதி மட்டக்களப்பில் இருந்து அம்பாறை வரை ஸ்டார்ன்டட் சைக்கிளோட்டப்போட்டி இடம்பெறும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்தார்.
இச்சைக்கிளோட்டப்போட்டி 70 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாக உள்ள அதேவேளை முதலாமிடம் பெறும் வீரருக்கு 1 இலட்சம் ரூபா பணப்பரிசும், 2ஆம் இடம் பெறுபவருக்கு 75 ஆயிரம் ரூபாவும், மூன்றாமிடம் பெறுபவருக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். 4ஆம் இத்திற்கு 25 ஆயிரம் ரூபாவும் 5ஆம் இடம்பெறும் வீரருக்கு 15 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். அத்துடன் 6ஆம் இடத்திலிருந்து 10ஆம் இடம்பெறும் வீரர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாவும், 11ஆம் இடத்திலிருந்து 20ஆம் இடம்பெறும் வீரர்களுக்கு 7,500 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்
இது மட்டுமல்லாமல் இச்சைக்கிளோட்டப்போட்டியில் 21ஆம் இடத்திலிருந்து 25ஆம் இடம் வருபவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தலைவர் பியும் பெரேரா தெரிவிக்கின்றார். இதேவேளை இப்போட்டி இடம்பெறும் தினமான 8ஆம் திகதி காலை மட்டக்களப்பு வாசிகசாலை முன்பாக போட்டியாளர்கள் வருகை தரவேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளனர்.
இச்சைக்கிளோட்டப் போட்டிக்கு நாட்டின் எப்பாகத்திலிரும் போட்டியாளர்கள் பங்கு பற்றலாம் என்றும் அறிவிக்கப்படுகிறது. இலங்கை விளையாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையோடு இடம்பெறும் இச்சைக்கிளோட்ட போட்டிக்கு ஏற்பாட்டாளர்கள் மற்றும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment