இந்தியா VS மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையிலான இறுதி ஒரு நாள் போட்டி சென்னையில் இன்று நடைபெறஉள்ளது.
டெரன் சமி தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்திய சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, ஒரு நாள் தொடரையும் 1-3 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியாவிடம் பறிகொடுத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா VS மேற்கிந்திய தீவுகள் மோதும் 5ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகின்றது. இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று போதிலும் தொடரை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதில் இரு அணியும் தீவிரமாக உள்ளன.
சேப்பாக்கத்தில் இந்திய அணி இதுவரை 8 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று அதில் 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணி இங்கு 5 போட்டியில் ஆடி 4-ல் தோல்வியும், ஒன்றில் வெற்றியும் கண்டுள்ளது.
இந்தியா VS மேற்கிந்திய தீவுகள் அணிகள் இங்கு சந்தித்துள்ள 3 ஆட்டங்களில் 2-ல் இந்தியா வெற்றியை பெற்றிருக்கிறது. கடைசியாக கடந்த மார்ச் மாதம் உலக கிண்ணத்தில் இந்தியா இங்கு மேற்கிந்திய தீவுகள் அணியை 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற செய்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment