Tuesday, January 03, 2012

கல்முனை ஸாஹிரா கல்லூரியிலிருந்து 135 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தகுதி


(எம்.ஐ.எம். அஸ்ஹர்) 
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து 135 மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக் தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் கணிதப்பிரிவில் எம்.எச்.எம்.ஸஸ்னி, எம்.எச்.எம்.முர்ஸித் உயிரியல் பிரிவில் எம்.ஜே.சாமித் ஸீத் கலைப்பிரிவில் கே.எல்.றியாஸ் அஹமட் மற்றும் எம்.ஏ.எம்.முஹாஜிர் ஆகியோர் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்றுள்ளனர்.

பொறியியல் துறையில் 13 மாணவர்களும் மருத்துவ துறையில் மூன்று மாணவர்களும் விவசாய துறையில் 5 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞான துறையில் 5 மாணவர்களும் பௌதீக விஞ்ஞான துறையில் 25 மாணவர்களும் வர்த்தக முகாமைத்துவ துறையில் 8 மாணவர்களும் கலைத்துறையில் 7 மாணவர்களும் எஞ்சிய மாணவர்கள் ஏனைய துறைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கணித துறையில் எம்.எச்.எம்.ஸஸ்னி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் 169 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். கடந்த வருடம் இக்கல்லூரியில் இருந்து பொறியில் துறைக்கு அம்பாறை மாவட்டத்தில் முதனிலை உட்பட 17 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் எம்.எம். இஸ்மாயில் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment