
(எஸ்.எல்.மன்சூர்)
புதிய 2012ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், புதிய மாணவர்களை முதலாம் தரத்திற்குச் சேர்ப்பதற்கான பணி எதிர்வரும் 2012.01.16 ஆம் திகதியன்று தொடங்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை தரம் ஒன்று அமைந்துள்ள சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளிலும் வரவேற்பு விழாவாக ஒழுங்கமைக்க வேண்டுமெனவும், வலய, மாகாண மட்டத்தில் அரசியல் தலைவர்களது தலைமையில் நடைபெறுவது பொருத்தமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் முதலாம் தர மாணவர்களை முறைப்படி அழைத்துவந்து வகுப்புக்களை ஆரம்பிப்பதுடன், இந்நாள் பிள்ளையின் நினைவில் மறக்க முடியாத நாளாகும் விதத்தில் ஒழுங்கு செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இத்திகதியன்று நடைபெறும் இவ்வேலைத்திட்டத்தினை பொருத்தமான விதத்தில் நேரத்தை ஒதுக்கி பணியினை செய்து கொள்ளுமாறும் கல்வியமைச்சின் செயலாளர் எல்.எம். குணசேகர சகல மாகாணச் செயலாளர்கள், மாகாணக் கல்வி, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், சகல (ஆரம்பப் பாடசாலை) அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment