
(சம்யா)
2012ஆம் ஆண்டு நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம்கள் பயிலும் பாடசாலைகள் அனைத்திலும் எதிர்வரும் பெப்ரவரி 8இல் பாடசாலை மட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையூடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் "அறிவுடன்கூடிய சிறந்த ஒழுக்கமிக்க எதிர்கால சந்ததியினரை உருவாக்குதல்" எனும் எண்ணக் கருவுக்கு அமைய தேசிய கலாசார அடையாளங்களை பேணிப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் இஸ்லாமிய கலாசாரத்தைப் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும், முஸ்லிம்களின் உள்ளங்களில் சமய அறிவினை வளர்த்துக்கொள்ளவும், சிறந்த மனப்பாங்கினை விருத்தி செய்யவும், ஏனைய இனத்தவர்களுடன் சகோதரத்துவம், ஐக்கியம் மற்றும் சௌஜன்யம் என்பவற்றின் மூலம் முன்மாதிரியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ வழிப்படுத்துவதுமே இவ்வேலைத் திட்டத்தின் இலக்காகும் எனக்குறிப்பிட்டு சகல பாடசலைகளுக்கும் அமைச்சின் செயலாளரினால் அனுப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் ஊடாக மாணவர்கள் மத்தியில் சிறந்த மார்க்க அறிவினையும், ஒழுக்க விழுமியத்தையும், தேசபற்றுள்ள மாணவர் சமுதாயத்தையும் கட்டியெழுப்ப இது போன்ற தேசிய ரீதியிலான விழாக்கள் உதவும் என்பது திண்ணம்.
0 comments:
Post a Comment