இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிவரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் ஒலிபரப்பவுள்ளதாக கூட்டுத்தாபனத் தலைவரான ஹட்சன் சமரசிங்க தெரிவித்துள்ளார். கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற முஸ்லிம் சமய வைபம் ஒன்றில் இதனைத் தெரிவித்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாத் தினத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை ஒலிபரப்பை 24 மணிநேர ஒலிபரப்பாகச் செயற்படுத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னைப் பலரும் ஒரு முஸ்லிமா எனக் கேட்பதாகவும் ஹட்சன் சமரசிங்க இங்கு தெரிவித்தார்.

0 comments:
Post a Comment