Sunday, January 08, 2012

3000 விவசாயிகளுக்கு ஜனாதிபதி காணி உறுதிகளை வழங்கினார்


மகாவலி-சி பிரதேசத்தில் காணியற்ற விவசாயிகள் 3000 பேருக்கு விவசாய பூமிக்கான காணி உறுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கையளித்தார். தெஹியத்த கண்டிய சாலிகா அரங்கில் இதுதொடர்பில் நடைபெற்ற விசேட வைபவத்தின்போதே வயல் காணிகளுக்கான இந்த உறுதிகள் கையளிக்கப்பட்டன.

இங்கு விவசாயிகள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுகையில், உலகில் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எரிபொருள் நெருக்கடிகள் தோன்றியபோதும் இலங்கை மக்களை பட்டினியில் வாடவிடாமல் உணவளிக்க உதவியவர்கள் எமது மகாவலி விவசாயிகள் என்பது பெருமைக்குரிய விடயமாகும். பயங்கரவாதத்தை நாம் வெற்றிகொண்டபோதும் போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதில் நாம் இன்னும் வெற்றிபெற முடியவில்லை. இது மிகவும் கவலைக்குரியதே. தொழில்மூலம் நீங்கள் பெறும் வருமானத்தை போதைப் பாவனையில் செலவிடாமல் உங்களது குடும்பம், பிரதேசம் மற்றும் நாடு ஆகியவற்றை முன்னேற்றும் வகையில் சிந்தித்து செயற்டவேண்டும் என்றார்.

இங்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், விவசாயிகளுக்கு அரசாங்கம் 350 ரூபா மானிய விலையில் உரம் வழங்கிய காரணத்தினால் விவசாயிகள் மத்தியில் விவசாயத்துக்கான உத்வேகம் பிறந்தது. அதன் காரணமாகவே எமது நாட்டின் தேவைக்கும் அதிகமாகவூம் அவர்களால் நெல் உற்பத்திசெய்ய முடிந்துள்ளது. எதிர்காலத்திலும் எமது அரசாங்கம் விவசாயிகளைப் பாதுகாத்து அவர்களின் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி கூடுதல் இலாபம் அடைந்துகொள்ள வழியமைக்கும் என்று கூறினார்.

நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றுகையில், மகாவலி பிரதேசம் முழுவதையூம் அளவை செய்யூம் செய்யூம் நடவடிக்கைகள் இப்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு வருட காலத்துக்குள் இக்காணிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் சனத்தொகை நாளுக்கு நாள் பெருகுவதைப்போல காணிகள் விஸ்தீரணம் அடைவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு கிடைக்கும் காணிகளில் உச்சபயனை அடைந்துகொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும் என்றும் கூறினார். 

0 comments:

Post a Comment