
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 4 இந்திய மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 4 மீனவர்களும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
மன்னார் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நான்கு இந்திய மீனவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர். இதேவேளை, கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்று கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் மீது இன்று (நேற்று) அதிகாலை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்ட கடற்படைப் பேச்சாளர் இவற்றை முற்றாத மறுப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த பெருமளவிலான இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் பல தடவைகள் மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பாக மீட்டெடுத்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளமையையும் கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment