Wednesday, January 04, 2012

நீர்கொழும்பில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம், பொருட்களை திருடியவர் கைது


(கலாநெஞ்சன்) 
நீர்கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள எட்டு வீடுகளில் 50 இலட்சம் ரூபா பெறுமதியன நகைகள் பணம் மற்றும் பல்வேறு பொருட்களை திருடிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்கள் மற்றும் நகைகளை மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ தெரிவித்தார். நீர்கொழும்பு தளுபத்த, தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரே கைது சேய்யப்பட்டவராவார்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் உத்தரவின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த பெரேரா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் டி.எஸ். விக்கிரமசிங்க பொலிஸ் கான்ஸ்டபிள்களான சேனாரத்ன, உக்குபண்டா, அரிச்சந்திர, வீரதுங்க ஆகியோரை கொண்ட குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


0 comments:

Post a Comment