
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் வழிகாட்டலில் அரச கரும மொழிகள் திணைக்கள அனுசரணையுடன் தமிழ்மொழி டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த 95 சிங்கள பொலிஸார் மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சி கல்லூரியிலிருந்து வெளியேறினர். மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் தமிழ் மொழி பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் கே. செல்வராசா விசேட அதிரடிப்படை மட்டக்களப்பு பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ். சேனாதீர ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
பயிற்சியை முடித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கடந்த ஐந்து மாதங்களாக இப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழ் மொழி டிப்ளோமா நெறியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment