
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் திருகோணமலை விகாரை வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. மூதூர் மல்லிகைத் தீவு பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான கந்தையாக ராஜகோபால் (வயது 38) என்பவரே இத் இத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் தனது உல்லாச பயணிகள் விடுதியிலிருந்து தனது மற்றுமொரு வர்த்தக நிலையமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
குறித்த நபர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடேசப்பிள்ளையின் கடைசித் தம்பி என்பதுடன் இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment