Monday, January 09, 2012

ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவபீடம் மூடப்பட்டது


மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வைத்திய பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஏழு பேர் வகுப்புகளுக்குத் தடை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வகுப்புக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

முதலாம் வருட மாணவர்களை மாணவர் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட போதும் வெளியேறாமையினால் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி ஜயசேனவின் மூலம் அனுராதபுரம் பிரதான நீதவானிடம் மாணவர்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றும் உத்தரவைப் பெற்று, சனிக்கிழமை பிற்பகல் 4 மணியுடன் பல் கலைக்கழக வளாகத் திலிருந்து அனைத்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டதுடன் பல்கலைக் கழகத்தின் வைத்தியபீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் அனுராதபுரம் நம்பாவ பிரதான வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பின்னர் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

0 comments:

Post a Comment