Monday, January 09, 2012

ஆஸ்கார் ரவிச்சந்திரனின் ஆஸ்கர் கனவு


வித்தியாசம் வேண்டும் என்பதற்காக கிராமத்துக்கு கதைகள், ஆக்ஷன் படங்கள் இப்படி எத்தனையோ விதவிதமான கதைகளை படமாக்கி வெற்றி பெறும் பட நிறுவனங்கள் பல. ஆனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் மட்டும் அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கையில் தான் இருக்கிறார். கமர்ஷியல் படங்கள் செய்வது தான் அவரது ஃபார்முலாவாக இருக்கிறது. அதில் அசைக்க முடியாத வெற்றியையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ரூ. 400 கோடி செலவில் தயாரித்து வரும் ஜாக்கிசான் ஹீரோவாக நடித்து வரும் படத்தில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த 2 பிரபலங்களையும் பாலிவுட் பட உலகில் இருந்து ஒரு பிரமாண்ட ஹீரோவையும் அந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கிறார் என்பது தான் லேட்டஸ்டாக பரவி வரும் ஹாட் டாப்பிக். ஜாக்கிச்சானின் திரைப்படம் இந்த ஆண்டே வெளிவரும் என்றும் கூறியுள்ளார் ஆஸ்கார். 

இது ஒரு புறம் இருக்க கமல்ஹாசன் மற்றும் தனுஷிடம் கால்ஷீட் பெற்றுள்ளார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இதனால் ஜாக்கிச்சானின் அந்த பிரமாண்ட படத்தில் இடம்பெறவிருக்கும் இரண்டு தமிழ் ஹீரோக்கள் கமல், தனுஷ் என கொக்கரிக்கிறது கோலிவுட் வட்டாரம். எது எப்படியோ ஆஸ்கார் ரவிச்சந்திரனின் ஆஸ்கர் கனவு நனவாக வாழ்த்துவோம்!

0 comments:

Post a Comment